"பசுமை நிறைந்த நினைவுகளே" மெய் மறந்து பாடிய மாவட்ட கல்வி அலுவலர்

ஆசிரியர் சங்க முப்பெரும் விழா


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டணியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில், மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றவர்கள், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நேற்று சங்கத்தின் மாவட்ட தலைவர் வள்ளிராசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது தன்னையும் அறியாமல் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான, "ரத்தத் திலகம்" என்ற தமிழ் திரைப்படத்திற்காக, கவிஞர் கண்ணதாசன் எழுதி, கேவி மகாதேவன் இசையமைத்து, டி எம் சௌந்தரராஜன்- சுசீலா இணைந்து பாடிய "பசுமை நிறைந்த நினைவுகளே, பாடி திரிந்த பறவைகளே, பழகிக் கழித்த தோழர்களே, பறந்து செல்கின்றோம். என்ற பாடலை மெய்மறந்து பாட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் அதனை ரசித்து கேட்டனர்.



