மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்

கரூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பெற்றுக்கொண்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் சென்று,கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உத்தரவிட்டதன் பெயரில் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story