பொள்ளாச்சி அடுப்புல கோட்டூர் பகுதியில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்திய பேரூராட்சி தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் கதவை பூட்டி திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 18 வார்டுகள் திமுக கவுன்சிலர்களும் அதிமுக காங்கிரஸ் சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும், துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த கிருஷ்ணவேணியும் உள்ளனர். இந்நிலையில் இன்று கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் கதவை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள கோட்டூர் பேரூராட்சியில், திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Next Story