வனப்பகுதிக்குள் சென்று வாக்கு சேகரித்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் சுமார் பத்து கிலோமீட்டர் நடந்து சென்று வனப்பகுதியில் குடியிருக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19.ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சார களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது, இதில் திமுக , அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியின் சார்பில் போட்டுயிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியான குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று அப்பகுதி மலைவாழ் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வீட்டுமனை பட்டாக்களை பெற்றுத் தந்தேன் மேலும் தற்போது தமிழக முதல்வரின் வாக்குறுதி, மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் மலைவாழ் மக்களுக்கு தேவையான சாலை, வீடுகள், குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதியாக செய்து தருவோம் என மலைவாழ் மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story