பிரதமர் மோடியின் உருவ படத்தை கிழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பிரதமர் மோடியின் உருவ படத்தை கிழித்து தீய்ட்டு எரித்து தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடி ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரிஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்த சாவி தமிழகத்தில் உள்ளதாக கூறி வாக்குகள் பெறுவதற்காக தமிழர்கள் மீது அவதூறு பரப்பியதைக் கண்டித்து பொள்ளாச்சியில் சட்டத் திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமைய தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடியின் உருவப்படத்தை வைத்து தமிழர்களை இழிவு படுத்திய மோடி ஒழிக ஓட்டுக்காக தமிழினத்தை கேவலப்படுத்திய மோடி ஒழிக என்று கோஷமிட்டனர் தொடர்ந்து மோடியின் உருவப்படத்தை எரித்தும் கிழித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

. இந்நிகழ்ச்சிக்கு சட்டதிட்டத்திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார் , தலைமை செயற்குழு உறுப்பினரும் வால்பாறை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமுதபாரதி, நகர மன்ற துணைத்தலைவர் கொளதமன் , மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் நகர்மன்ற உறுப்பினர் பி.ஏ.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மேலும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல், முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story