விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்தினருக்கு திமுக நிதி உதவி

விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்தினருக்கு திமுக  நிதி உதவி

 நிதி உதவி வழங்கல் 

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் நாளிதழ் செய்தியாளர் அஜய் ஜோசப் குடும்பத்தினருக்கு நகர திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த அஜய் ஜோசப் கடந்த 30.ம் தேதி பணியை முடித்துக் கொண்டு செல்லப்பம்பாளையம் புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். பின்பு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனயைடுத்து அவரது குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அவரது மனைவி சபீனாவிடம் வழங்கினார். இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story