திமுக இளைஞரணி மாநாட்டு: விளம்பரம் வரையும் பணி தீவிரம்
கரூர் அருகே திமுக இளைஞரணி மாநாடு- விளம்பரம் வரையும் பணி தீவிரம். டிசம்பர் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.
இந்த மாநாட்டிற்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக, கரூர்- நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்தில் மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்து விளம்பரங்கள் வரையும் பணி தீவிரமடைந்துள்ளது. மாநாட்டிற்கு ஏராளமான இளைஞர்களை திரட்டி செல்வதற்காக இவ்வாறு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்த விளம்பரங்கள் வரையப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்பதாக அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.