எம் எல் ஏ நிதியில் சொந்தக் கட்டிடத்தில் நியாயவிலைக் கடை

X
நியாய விலை கடை திறப்பு.
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தொகுதி மேம்பாட்டியிலிருந்து ரூ.18லட்சம் மதிப்பில் சொந்த கட்டிடத்தில் நியாய விலை கடை திறப்பு.
மயிலாடுதுறை நகர் கூரைநாடு வண்டி பேட்டையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நியாய விலை கடையை சொந்த கட்டத்தில் மாற்றுவதற்கு இந்த பகுதி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துவந்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தமது தொகுதி நிதியிலிருந்து ரூ.18 லட்சம் அளித்தார். புதிதாக கட்டிய கட்டிடத்தில் திறப்பு விழா நடைபெற்றது நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் வகித்தார் துணைத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார் எம் எல் ஏ ராஜகுமார் கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார் நகராட்சி ஆணையர் சங்கர் குத்துவிளக்கேற்றினார். வார்டு உறுப்பினர்கள் ரத்தினவேல்,ராமச்சந்திரன், விபி ராஜேந்திரன் கேஸி சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
