ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு பெண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் வளர்ப்பு யானைகள் முகாமில் ஓய்வு பெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் ஊலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிகமுத்தியில் கும்கி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு யானைகள் முகாமில் வனத்துறையினரால் சுமார் 25.க்கும் மேற்பட்ட யானைகளை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் அல்லது கிராமங்களில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்கும் , டாப்ஸ்லிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் யானைகள் சவாரி செய்வதற்கும் மற்றும் வனத்துறையினருக்கு உதவியாக இருக்க பல்வேறு பணிகளை செய்துவர முகாமில் யானைகளை வனத்துறையினர் மலைவாழ் மக்கள் உதவியோடு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ஓய்வு பெற்ற சாரதா (வயது 70) என்ற பெண் யானைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரதா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மேலும் ஓய்வு பெற்ற யானைக்கு உடற்கூறு ஆய்வுக்கு பின்பு அதே பகுதியில் மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானை உயிரிழப்பால் வனத்துறையினர் மத்தியிலும் மற்ற யானைகள் பாகன்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story