நகராட்சிக்கு தூய்மைப்பணி வாகனங்கள் அன்பளிப்பு
மயிலாடுதுறையில் ஐசிஐசிஐ வங்கியின் சமூக பங்களிப்பு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணி வாகனம் மற்றும் வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ ஃபவுண்டேஷனின் சமூக பங்களிப்பு நிதியின்கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகராட்சி மற்றும் இரண்டு விவசாய குழுக்களுக்கு ஐசிஐசிஐ பவுண்டேஷன் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணி வாகனங்கள் வழங்கப்பட்டன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துகொண்டு தூய்மை பணி வாகனங்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை வழங்கினார். இதில், கூடுதல் ஆட்சியர் சபீர்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story