அரசு ஊழியர்களை தேர்தல் பணிக்கு கட்டாயப்படுத்தாதே: சமூக ஆர்வலர்

அரசு ஊழியர்களை தேர்தல் பணிக்கு கட்டாயப்படுத்தாதே: சமூக ஆர்வலர்

சமூக ஆர்வலர் 

விருப்பமில்லாத அரசு ஊழியர், ஆசிரியர்களை வற்புறுத்தி தேர்தல் பணி கொடுக்காதீர் என தலைமை தேர்தல் ஆணையருக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்து உள்ளார்.

விருப்பமில்லாத அரசு ஊழியர், ஆசிரியர்களைவற்புறுத்தி தேர்தல் பணி கொடுக்க கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் பணிகளில் நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர்களே அதிகமாக தேர்தல் பணியில் அமர்த்தப்படுவதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பெண்களாக இருப்பதனால் உடல் ரீதியாக மனரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கின்ற பெண் ஆசிரியர்கள் தங்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்னும் கோரிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

மேலும் இதயநோய், கைக்குழந்தைகளுடன் உள்ள பெண்ஆசிரியர்கள், சர்க்கரை நோய் நுரையீரல் போன்ற நீண்டகால நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறுகின்றவர்கள் கூட தங்களை தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளித்து விடுவிக்குமாறு, தக்க மருத்துவ ஆதாரங்களுடன் தெரிவித்தும் கூட அதை செவிமடுக்காமல்,

வலுக்கட்டாயமாக தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கு வர வேண்டும் என்றும் தேர்தல் பணி ஆற்றிடவேண்டும் என்றும் அழைப்பு அனுப்புவது என்பது ஏற்புடையதல்ல. மனிதநேயமற்றதாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 17 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்கள் இருக்கின்ற பொழுது தேர்தல் பணிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே தேவைப்படுகிறார்கள் என்பதால், முழு மனதோடு தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தல் பணி வழங்க வேண்டும்.

விருப்பமில்லாதவர்களுக்கும் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் விலக்களித்தும், குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வரும் தனியார் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளை கூட இப்பணிகளில் ஈடுபடுத்தியும் இப்பிரச்சணைக்கு தீர்வு காணலாம். ஜனநாயகத்தைக் காக்க, முழுமையான தேர்தல் வெற்றி அடைய,

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தல் பணி என்னும் நிலைப்பாட்டை எடுத்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஆரோக்கியமான அமைதியான நேர்மையான தேர்தலுக்கு வழி வகுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

எனவே அதனை நிறைவேற்ற விருப்பமில்லாத அரசு ஊழியர், ஆசிரியர்களைவற்புறுத்தி தேர்தல் பணி கொடுக்க கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Tags

Next Story