கரூர்: போதை தடுப்பு குறித்து ஆலோசனை
போதை ஒழிப்பு ஆலோசனை
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் நடப்பு காலாண்டிற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் அரசு மருத்துவ க் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனையில், போதை பொருட்கள் நுகர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்து தருவது குறித்தும், தோட்ட பயிர்களில் ஊடுபயிராகவும், வீடுகளில் தொடர்பு செடியாகவும் கஞ்சா செடி பயிரிடப்படுகிறதா? என அனைத்து இடங்களில் ஆய்வு மேற்கொண்டு கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
போதைப்பொருள் விற்பனை, சேர்த்து வைத்து விநியோகம் செய்தல், போன்றவற்றில் எவரேனும் ஈடுபடுகின்றனரா? என்பதை ஆய்வில் கண்டறிந்து, உடனுக்குடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து அலுவலர்களும் கொண்ட குழுவினர்கள், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். இந்த ஈய்வு கூட்டத்தில் கலால் உதவி ஆணையர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், போதை தடுப்பு ஆய்வாளர் மாசேதுங் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.