கரூர் அருகே சாலையில் கிடந்த பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை
பணம் பறிமுதல்
கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலராக பணியாற்றி வருபவர் கோமதி. இவர் ஏப்ரல் 18ஆம் தேதி, பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் நாள் இரவு, கரூரை அடுத்த சுங்ககேட் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக பணம் கொடுக்க சிலர் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அதில் பணம் வைத்திருந்த ஒருவர், தேர்தல் அலுவலரை அடையாளம் கண்டு கொண்டதால், தன்னிடம் இருந்த பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அப்போது கீழே கிடந்த அந்த பணத்தை எடுத்து, எண்ணிப் பார்த்தபோது அதில் 24 ஆயிரத்து 900 ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
மேலும், இது தொடர்பாக தேர்தல் அலுவலர் கோமதி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடி தலைமறை வாகி விட்ட நபரை தேடி வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.