தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் !

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் !

 போராட்டம்

கரூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுப்பட்டார்கள்.

கரூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள். தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் காத்திருப்பு போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மின்வாரிய அலுவலகத்தில் கரூர் மின்வட்ட கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன், சி ஓ டி இ இ மண்டல செயலாளர் தனபால், டிஎன்பிஓ மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், நாமக்கல் மின் வட்ட கிளை தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது 65,000 மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். G.O.100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து, அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின்வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு முதல் தவணைத் தொகை வழங்கிட வேண்டும்.

மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மின்விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி 10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணையை மின்வாரியத்திலும் அமல்படுத்தி உத்தரவு வெளியிட வேண்டும். கேங்மேன் ஊர்மாற்றம், கள உதவியாளர் பதவி மாற்றம் அளித்திட வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story