பணியின் போது கீழே விழுந்து படுகாயம் அடைந்த மின்வாரிய ஊழியர்
பணியின் போது கீழே விழுந்து படுகாயம் அடைந்த மின்வாரிய ஊழியர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், தெங்கியானந்தம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 42. இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில், கரூர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட எம் புதூரில் இருந்து கொக்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ள சாரதி நிறுவனத்திற்கு எதிரில் உள்ள ட்ரான்ஸ்பார்மரில், மேலே நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரவணனுக்கு முகம், இடுப்பு, இடது கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக உடன் பணியாற்றியவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து சக ஊழியர்கள் மூலம் அறிந்த சரவணன் மனைவி கலைவாணி வயது 38 என்பவர், இது குறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story