மின்சார சிக்கன வாரவிழா பேரணி
மயிலாடுதுறையில் துறையில் மின்சார சிக்கன வார விழா பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தினர், மின் சிக்கன வார விழாவை கடந்த 14 ஆம் தேதி முதல் நாளை 20ஆம்தேதி வரை நடத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறை உதவி செயற் பொறியாளர் அலுவலக வளாகத்திலிருந்து பேரணி புறப்பட்டது . பேரணியை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செயற்பொறியாளர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர் சரவணன், அருள் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புறப்பட்ட பேரணி, மயிலாடுதுறை முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மின்வாரிய அலுவலகத்தை அடைந்தது.
இதில் மின்வாரிய ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர், மின்சார உபயோக சிக்கனத்தை பற்றிய பிரச்சாரமும், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. பேரணி முடிவில் உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Next Story