வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரம்
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான மாதிரி வாக்குச்சாவடி அமைக்க 77 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு மாதிரி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. மயிலாடுதுறை சித்தர்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகத்தில் உள்ள, மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கிலிருந்து, மயிலாடுதுறை , சீர்காழி, பூம்புகார், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டத்திற்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பப்படுவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் திமுக வழக்கறிஞர் சிவதாஸ், அதிமுக நாஞ்சில்கார்த்தி, தேமுதிக பண்ணைபாலு, ஆம்ஆத்மி ஸ்ரீராமுலு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில், மயிலாடுதுறை ஆர்டிஓ செல்வி யுரேகா, சீர்காழி ஆர் டி ஓ அர்ச்சனா, வட்டாட்சியர்கள் விஜயராகவன், சபிதா தேவி உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். 77 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மயிலாடுதுறை, சீர்காழி பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு ஆர்டிஓ அலுவலகத்திலும், சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு சீர்காழி ஆர்டிஓ அலுவலகத்திலும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story