புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் !!

புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் !!

யானைகள் கணக்கெடுப்பு பணி

தமிழகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம் இன்று தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணியானது மூன்று நாட்களுக்கு நடைபெறும் - இந்த கணக்கெடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம் இன்று தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணியானது மூன்று நாட்களுக்கு நடைபெறும் - இந்த கணக்கெடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்றுள்ளனர். பொள்ளாச்சி மே.23 நாடு முழுதும் யானைகள் குறித்த கணக்கெடுப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.. அப்போது யானைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் 2,761 யானைகள் இருப்பதாக தமிழக வனத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு 2023 ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2,961 யானைகள் இருப்பதாக தெரியவந்தது.

இருப்பினும், இதில் துல்லியமன தகவல்களை கூடுதலாக பெற, இரண்டாம் கட்டமாக ஒருங்கிணைந்த யானைகள் கணகெடுப்பு நடத்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள வனத்துறைகள் இணைந்து இந்த கணக்கெடுப்பானது நடத்த முடிவு செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பை இன்று துவங்கியுள்ளது இன்று நாளை நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணியானது நடைபெறும் என தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு உள்ளிட்ட 26 வனக்கோட்டங்களில் உள்ள, 3,496 சதுர கி.மீ., பரப்பளவு பகுதிகளில் ஒவ்வொரு பகுதியிலும் தலா, 5 சதுர கி.மீ., பரப்பளவு என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டு வனத்துறையினர், வனத்துறை கள பணியாளர்கள், வன உயிரின ஆர்வலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை அமராவதி உள்ளிட்ட ஆறு வனச்சரகங்களிலும் உள்ள 32 பீட் பகுதிகளில் ஒரு பீட் பகுதிக்கு ஒரு வணவர், வனக்காப்பாளர், மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 128 வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணியானது இன்று தொடங்கி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும் பின்பு மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் இந்த கணக்கெடுப்பு பணியினை ஒப்படைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர் ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் வனத்துறையினர் மட்டுமே இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர் தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story