ஈமக்கிரியை மண்டபபணி தொடரும் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
மயிலாடுதுறை மாப்படுகை ஊராட்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர், இவர்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் கட்டவேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்திவந்தனர்.
அப்பகுதி மக்களுடன் இணைந்து மார்க்.கம்யூ கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து காவிரி ஆற்றங்கரையோரம் ஈமக்கிரியை மண்டபம் புதிதாக கட்டப்பட்டுவந்தது.
ஈமக் கிரியை கட்டும் இடம் மாற்று சமூகத்தினருக்கான இடுகாடு என்று ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது, பணியைமீண்டும் தொடரக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தும், எந்த முடிவும் எட்டவில்லை. ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி காலதாமதம் ஏற்படுவதால் ஊர் மக்களே கட்டப்போவதாக அறிவித்தனர்.
இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் விவசாய சங்க செயலாளர் துரைராஜ் போராட்டக் குழு அமைப்பு சாமுவேல்ராஜ் , மாப்படுகை ராமலிங்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கருமாதி மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அத்துமீறி கருமாரி மண்டபம் கட்டப்படுவதாக கூறி கைது நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
கருமாதி மண்டபம் கட்டும் பணி இன்றுதொடங்கப்பட்டு விட்டதால் அது இனிமேல் தொடர்ந்து கட்டப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து, இன்றைய கட்டுமான பணியை நிறுத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்களும் போலீசாரும் கலைந்து சென்றனர்.