வேலைவாய்ப்பு முகாம் விளம்பர வாகனம்

வேலைவாய்ப்பு முகாம் விளம்பர வாகனம்

வேலைவாய்ப்பு முகாம் 

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் தனியார் வேலை முகாம் விழிப்புணர் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் குத்தாலத்தில் உள்ள ராஜ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதை கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் வேலை நாடுனர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பிரச்சார வாகனம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு இடங்களில் 17ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்து வாகனத்தில் ஒளிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. தொடக்க விழா நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story