கரூர் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் அதிகளவில் பட்டதாரிகள் ப.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, அரசு கலைக்கல்லூரியில், இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை அறிந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கக்கூடிய பட்டதாரி இளைஞர் மற்றும் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் ஆகியோர், வேலை தேடி இன்று அரசு கலைக்கல்லூரியில் குவிந்துள்ளனர். இங்கு, பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் நிறுவனத்திற்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நேர்காணல் நிகழ்வில் தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணையை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story