கரூருக்கு வருகை தரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு.
டிசம்பர் 29 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு.
டிசம்பர் 29 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு.
டிசம்பர் 29ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு. கரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து கட்சிகளும் வியூகங்கள் அமைத்து செயலாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் தமிழக முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக ஓபிஎஸ் நேரில் சென்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 29ஆம் தேதி வருகை தர உள்ளார். அது தொடர்பாக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில், கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூருக்கு வருகை தரும் ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பது அளிப்பது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் ஏ டி பி கணேசன், மாநில இளைஞரணி பாசறை செயலாளர் லோகநாதன், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் கரூர் அன்பு, வடக்கு நகர செயலாளர் அன்பழகன், தெற்கு நகர செயலாளர் கோபால், மாநகர துணை செயலாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பித்தனர்.
Tags
Next Story