மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

தமிழர்களின் பாரம்பரியத்தை இளைய சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களைகட்டியது.

மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள எவரெஸ்ட் கென் பிரிட்ஜ் தனியார் பள்ளியில் மாணவிகள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்ட மாணவிகள் மண்பானையில் பொங்கல் வைத்து கோலம் போட்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து ஆசிரியர்களுடன் வட்டமாக நின்று கும்மியடித்து, சிலம்பாட்டம் ஆடி உற்சாகமடைந்தனர். இதில், மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் பாவாடை, தாவணி மற்றும் சேலை ஆகிய பாரம்பரிய உடைகளை அணிந்தும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. மாணவர்களின் கண் கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சி காண்பொரை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதில் அனைத்து மதங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story