பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஈஸ்வரன் பிரச்சாரம்

பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பிரச்சாரம் செய்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வர சாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய போது மத்தியில் ஆளும் பிஜேபி அரசால் பத்தாண்டுகள் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை ஆனால் நாடு முன்னேறி விட்டது என்று சொல்கின்றார்கள் மோடியை முன்னிருத்தி உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து இந்தியா முன்னேறி விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

குறிப்பாக தமிழ்நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள் எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை முதலமைச்சரை இயங்க விடுவதில்லை கடலுக்கு அடியில் சென்றும் வானத்தில் சென்றும், திருவள்ளுவரையும் சாமி கும்பிடுவர்

ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ள மாட்டார் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் சிறு குறு தொழில்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்..

Tags

Read MoreRead Less
Next Story