பொள்ளாச்சி பகுதியில் வெடிபொருட்கள் பறிமுதல் இருவர் கைது

பொள்ளாச்சி பகுதியில் வெடிபொருட்கள் பறிமுதல் இருவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட ஜெலடின் குச்சிகள்

பொள்ளாச்சி அருகே கல்குவாரியில் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 200 ஜெலடின் மற்றும் டெட்னேட்டர் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரியில் இயங்கிவருகிறது.. இதில் சில கல் குவாரிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது தொடர்ந்து இப்பகுதியில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் கல்குவாரிகளில் ஜெலட்டின், மற்று எலக்ட்ரிக் டெனரேட்டர் போன்ற வெடி பொருட்களைக் கொண்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆனைமலை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் சோதனையிட்டபோது தளபதி 70 வயது என்பவருக்கு சொந்தமான கல்குவாரி தோட்டத்தில் ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது

இதனையடுத்து அங்கிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள் 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1200 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story