வைக்கோல் போரிலிருந்து தவறி விழுந்தவர் பலி

வைக்கோல் போரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
X

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் வைக்கோல் போரிலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மனைவி ஆஷாபேபி(42) இவரது கணவரும் இவரும் இணைந்து விளாவடி பகுதியில் சொந்த உபயோகத்திற்காக வைக்கோல் போர் அமைத்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில் போர் மேலிருந்து வைக்கோலை பரப்பிக் கொண்டிருந்த செல்வம் திடீரென மயக்கம் வருவதாக தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

உடனடியாக குடிக்க தண்ணீர் எடுப்பதற்கு வீட்டிற்குள் ஓடி தண்ணீர் சொம்புடன் வந்தபோது, மயக்கமாகியிருந்த பன்னீர்செல்வம் வைக்கோல் போரிலிருந்து தலைகுப்புற கீழே விழுந்து மயங்கிக் கிடந்தார். உடனடியாக பன்னீர்செல்வத்தை குத்தாலம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் நிலமை மிகவும் கலைக்கிடமாக இருந்ததால் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழகுப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story