குடும்ப தகராறு - கணவன், மனைவி கைது

குடும்ப தகராறு - கணவன், மனைவி கைது

பைல் படம் 

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த மனைவி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரி மங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் வேல்முருகன் (32) இவரது மனைவி ஐஸ்வர்யா(32). இருவருக்கும் கருத்துவேறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். ஆனால் இருவரும் சொத்தில் பங்கு பிரித்துக்கொளாளவில்லை. .வேல்முருகனின் அண்ணனால் சொத்து தகராறு காரணமாக சென்ற ஆண்டு வேல்முருகனின் தந்தை கலியபெருமாள் வெட்டி கொலை செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக அந்த வீடு பூட்டி இருந்தது.

வேல்முருகனின் மனைவி ஐஸ்வர்யா நீண்ட நாள் தந்தை வீட்டில் இருந்தவர், திடீரென்று தன் குழந்தையுடன் மீண்டும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விட்டார். இதை அறிந்த ஐஸ்வர்யாவின் கணவர் வேல்முருகன் ஐஸ்வர்யா வீட்டில் இருந்தபோது அவரை திட்டி அடிக்க பாய்ந்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார், அவர் வீட்டை விட்டுவெளியேறாததால் கதவை இழுத்து பூட்டி விட்டு சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயலட்சுமி (75 ), என் கணவர் இறந்த பிறகு வீடு பூட்டி இருக்கிறது, எங்களுக்குள் பாகப்பிரிவினை எதுவும் நடக்கவில்லை இந்த நேரத்தில் எனது மருமகள் வேண்டுமென்றே பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தகராறு செய்கிறார் என்று குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோன்று ஐஸ்வர்யாவும் தன்னை வீட்டில் வைத்து பூட்டி தன் கணவர் கொடுமை செய்தார் என்றும் புகார் அளித்திருந்தார். இருவர் அளித்த புகாரின் பேரில், வீட்டின் கதைவை உடைத்து உள்ளே புகுந்த ஐஸ்வர்யா மீதும் அவரை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டிய வேல்முருகன் மீதும் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி விரிவுரையும் கைது செய்து சிறையில்

Tags

Read MoreRead Less
Next Story