முற்றுகை போராட்டத்தில் பூச்சிமருந்து குடிக்க முயற்சித்த விவசாயியால் பரபரப்பு

பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டபோது, ஒரு விவசாயி பூச்சி மருந்து குடிக்க முயற்சித்ததால் பரபரப்பு உண்டானது.

பொள்ளாச்சி..ஜூன்..20 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 50.க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட பகுதியில் சில விவசாயிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.. இதனால் போலீசார் விவசாயிகளிடம் கள் இறக்குவதை நிறுத்த வேண்டும் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொய் வழக்குகளை போடுதல் மற்றும் ஒரு சில விவசாயிகளை தீவிரவாதியை போல விசாரணை நடத்தியதாக புகார் தெரிவித்த விவசாயிகள் 50.க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் பாபு தலைமையில் பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க ஊர்வலமாக வந்தனர்..

அப்போது போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் மணமுடைந்த விவசாயி பாலசுப்பிரமணியம் என்பவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் உடனடியாக போலீசார் விவசாயிடமிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை பிடுங்கி விவசாயி பாலசுப்பிரமணியை காப்பாற்றினர்.. இதனால் பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் 50.க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

மேலும் விவசாயிகளிடம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.. பின்னர் நாராயணசாமி நாயுடு விவசாயிகளின் சங்கம் மாநில தலைவர் பாபு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இரக்க அனுமதி அளித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் கள்ளிறக்க அனுமதி தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கள் போதை பொருள் கிடையாது உணவில் ஒரு பகுதியாகவும் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாகவும் கல் உள்ளது

மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி இருந்தும் தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்கி விற்பனை செய்ய போலீசார் தடுத்து வருகின்றனர் விவசாயிகள் மீது பல பொய் வழக்குகளை போட்டு வருவதால் விவசாயிகள் தொடர்ந்து மன வேதனையில் உள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக மதுபான கடைகளை குறைத்து விட்டு தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பொள்ளாச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளோடு சாலையில் அமர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மாநில தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story