வடகிழக்குப் பருவமழை துவங்கியது: விவசாயிகள் மகிழ்ச்சி

வடகிழக்குப் பருவமழை துவங்கியது: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை

மயிலாடுதுறையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது முதல் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், மாலை 5 மணி முதல் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு, வில்லியநல்லூர், மங்கைநல்லூர் தரங்கம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் போதிய அளவு மழை பெய்யாததால் தற்பொழுது பெய்துவரும் மழை தாளடி, சம்பா சாகுபடிக்கு மிகவும் ஏற்றது என விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது- இன்று காலை 8 மணிவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு. மயிலாடுதுறை 2.55செ.மீ., மணல்மேடு 3.5 செ.மீ., சீர்காழி 3.6 செ.மீ., கொள்ளிடம் 2.46 செ.மீ., பொறையார் 21 செ.மீ., தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

Tags

Next Story