விவசாயிகள் ஆவேசம்

விவசாயிகள் ஆவேசம்

பாமாயில் விவசாயம் செய்வது நாங்கள்; ஆனால் வெளிநாடு சுற்றுலா செல்வது சம்பந்தம் இல்லாதவர்களா? என, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.

பாமாயில் விவசாயம் செய்வது நாங்கள்; ஆனால் வெளிநாடு சுற்றுலா செல்வது சம்பந்தம் இல்லாதவர்களா? என, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 விவசாயிகள் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2005-ம் ஆண்டுமுதல் எண்ணெய் பனை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு 8 டன் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ஹெக்டேருக்கு சுமார் 22 டன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர். இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் எண்ணெய் பனை உற்பத்தியை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள மலேசியா நாட்டுக்கு அனுப்புவது குறித்து மத்திய, மாநில அரசின் சுற்றுலா திட்டத்தில் எண்ணெய் பனை விவசாயிகளிடம் கேட்டுள்ளனர்.

முறைகேடாக நெல் விவசாயம் செய்பவர்கள் தேர்ந்தெடுக்க பட்டது குறித்து சென்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பாமாயில் விவசாயம் செய்வது நாங்கள், செல்வது வேறு நபர்களா என்று கூறி முழக்கமிட்டனர் . இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில் தவறு நடந்து விட்டது அடுத்த முறை தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி சமாதானப் படுத்தினார்.

Tags

Next Story