விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாதம்தோறும் கடைசி வாரத்தில் புதன்கிழமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். அதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள், வல்லுநர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் மற்றும் ஊரகப்பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே அளித்த மனுக்களின் அடிப்படையில், இன்று அதிகாரிகளிடம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் கேள்வி கேட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.