மயிலாடுதுறை அருகே வீட்டை பிடுங்கி கொண்டு மகன் விரட்டியதாக தந்தை புகார்

மயிலாடுதுறை அருகே வீட்டை பிடுங்கி கொண்டு மகன் விரட்டியதாக தந்தை புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் உள்ள லூர்து நகரில் வயதான கணேசன்(80) மற்றும் காது கேளாத ராஜபாக்கியம்(78) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிவாணன் மற்றும் ராஜு என்கின்ற இரண்டு மகன்,2மகள்கள் உள்ளனர்.

மேலும் தாய் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவர்களை பராமரித்து வருவது என்றும் அவர்கள் மறைந்த பிறகு சொத்துகளைஇருவரும் எடுத்துக் கொள்வது என்று கூறி 2வீடுகளையும் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவந்த மதிவாணன் வீட்டில் வயதான தம்பதியினர் குடியிருந்து வந்துள்ளனர். மதிவாணன் மனைவி மாமனார் மாமியாரை கொடுமை படுத்தி உள்ளார்

இதனிடையே மதிவாணனும் வயதான தம்பதியினரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு ஓடுங்கள் என்று திட்டுவதும் அடிப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது. தந்தை கழிப்பறைக்கு செல்லும் வழியை அடைத்து வைத்து துன்புறுத்தினார் வேறு வழி இல்லாமல் பெரிய மகன் வீட்டு மாடியில் தற்போது தங்கி உள்ளார். அங்கேயும் இருக்கக்கூடாது ஓடு என்று அறிவாளைக் காட்டி மிரட்டி வருகிறார். அதுமட்டுமின்றி அறிவாளுடன் புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு அனுப்பி தாய் தந்தை இருவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தனது சிறிய மகன் மதிவாணன் திட்டமிட்டு வீட்டினை எழுதி வாங்கிக்கொண்டு தங்களை விரட்டியதாகவும் , உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி முதியவர் கணேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து சிறிய மகன் மதிவாணன் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து தனது வீட்டினை மீட்டு தர வேண்டும் என்றும் தன்னை தனது மகனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் மனு அளித்தார்அ ஆர்டிஓ மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தன் பேரில் அவர் திரும்பி சென்றார் .

Tags

Read MoreRead Less
Next Story