வேட்பு மனு தாக்கல்; சப் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
இன்று அதிமுக, திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதால், பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனு அளித்து வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தீரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்,. இதனால் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக நுலை வாயில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள்,நான்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
Next Story