மயிலாடுதுறை மாவட்ட மீன்வர்கள் கடலுக்குள் செல்ல தடை..!
படகு துறை
மயிலாடுதுறை மாவட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் (13.11.2023) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு, சந்திரபாடி, கொடியம்பாளையம், சின்னூர்பேட்டை உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் (13.11.2023) இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு விடுத்துள்ளார்.
Tags
Next Story