மீன்பிடி தடைகாலம்; விசை படகுகள் கரைக்கு திரும்ப உத்தரவு

மீன்பிடி தடைகாலம்; விசை படகுகள் கரைக்கு திரும்ப உத்தரவு

வரும் 15 முதல் ஜூன் 14 முடிய மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 14ம் தேதி இரவு 12.00 மணிக்குள் விசை படகுகள் கரைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 15 முதல் ஜூன் 14 முடிய மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 14ம் தேதி இரவு 12.00 மணிக்குள் விசை படகுகள் கரைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைகாலம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மீனவர்களுக்கு அறிவிப்பு 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும் தடைசெய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலுக்கு மீன்பிடிக்க கூடாது எனவும், கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிடப்பட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை மயிலாடுதுறை மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், மீன்பிடி தடைகால அமலுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14-04-2024 இரவு 12.00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப அனைத்து படகுகளுக்கும் அறிவுறுத்திடவும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் மூலம் அப்படகில் உள்ள மீனவர்களுக்கு பிற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனடியாக கரைக்கு திரும்பிவிட தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தெரிவித்துள்ளார்

Tags

Next Story