500 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்; ஐந்து பேர் கைது

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நடைபெறவுள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் வெளிமாநில மதுபானங்கள், கள்ள சாராயம் கடத்துவது தொடர்பாக நல்லாடை, நண்டலார், ஆயப்பாடி, ஆகிய மதுவிலக்கு சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நல்லத்துக்குடி, நீடூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகிகளில் பாண்டி சாரயம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

நல்லத்துக்குடி பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்துவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நல்லத்துக்குடியில் சாராயம் விற்பனை செய்த மயிலாடுதுறை மேல ஒத்தசரகு பகுதியை சேர்ந்த தேவா(50) என்பவரை நேற்று மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அதே பகுதியில் சாராய விற்பனை செய்து வந்த சாராய வியாபாரி மணிகண்டன் என்பவரை இன்று போலீசார் கைது செய்தனர். இதேபோல் . நீடுர் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த. ராணி (60) ஜோதி (41) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 500 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றிய போலீசார் மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் கோவில் அருகே சாராய விற்பனை செய்து வந்த செல்லதுரை (48) என்பவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story