கரூரில் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணி வகுப்பு ஊர்வலம்

கரூரில் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணி வகுப்பு ஊர்வலம்
X

கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்

கரூரில் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக, துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர்,

இணைந்து நடத்திய கொடி அணி வகுப்பு ஊர்வலம், கரூர் 80 அடி சாலையில் இருந்து துவங்கி, பேருந்து நிலைய ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர், ஜவஹர் பஜார் வழியாக நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுப்பை நடத்தினர்.

இந்த அணி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் துவக்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவத்தினர்,

காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே வாக்களிக்கும் போது ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story