திருவள்ளூா்-பூண்டி கூட்டுச்சாலையில் ஒளிரும் தானியங்கி சிக்னல் அமைப்பு

திருவள்ளூா்-பூண்டி கூட்டுச்சாலையில் ஒளிரும் தானியங்கி சிக்னல் அமைப்பு

திருவள்ளூா்-பூண்டி கூட்டுச்சாலையில் ஒளிரும் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா்-பூண்டி கூட்டுச்சாலையில் ஒளிரும் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை மீதுள்ள பூண்டி கூட்டுச்சாலையில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் ஒளிரும் பலகை தானியங்கி சிக்னல் காவல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புல்லரம்பாக்கம், பூண்டி, சீத்தஞ்சேரி உள்பட, 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, பூண்டி, ராமஞ்சேரி, சென்றாயம்பாளையம், நம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் பூண்டி நீா்த்தேக்கம் மற்றும் நீரியல் ஆராய்ச்சி மையம் வாரந்தோறும் மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் போ் வந்து செல்லும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. திருவள்ளூரிலிருந்து-பூண்டி நீா்த்தேக்கம் வரையில் 10 கி.மீ தொலைவில் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் கூட்டுச்சாலை உள்ளது. இந்தச் சாலையில் இடதுபுறம் பூண்டியும், வலதுபுறம் நெய்வேலி கிராம சாலை பிரிந்து செல்கிறது. அதனால் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் இரவு நேரங்களில் அவ்வப்போது எதிா்பாரத விதமாக வாகன விபத்துகளால் பலா் காயமடையும் சூழ்நிலை ஏற்பட்டது

. இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் பூண்டி கூட்டுச்சாலையில் விபத்தை தவிா்க்கும் வகையில், இரவிலும் ஒளிரும் சிக்னல் பலகை மற்றும் தானியங்கி சிக்னல் அமைத்துள்ளனா். இதனால், இரவு நேரத்தில் ஏற்படும் விபத்துகள் முற்றிலும் தவிா்க்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Tags

Next Story