கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூச்செரிதல் விழா

கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூச்செரிதல் விழா

பணிகள் தீவிரம் 

கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூச்செரிதல் விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூச்செரிதல் விழாவிற்கான பணிகள் தீவிரம். விழா கமிட்டி தலைவர் பேட்டி. கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா ஆண்டுதோறும் மே மாதத்தில் நடப்பது வழக்கம்.

நடப்பு ஆண்டில் மே 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல லட்சம் பேர் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பூச்சொரிதல் விழா மே 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்று இரவு துவங்கும் இந்த விழா விடிய விடிய நடைபெறும். கரூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மின் அலங்காரத்துடன், மேளதாளம் முழங்க, பல்வேறு வண்ண வண்ண பூக்களை தட்டுகளில் அலங்காரம் செய்து எடுத்து வருவர்.

இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள விழா கமிட்டியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல வருடங்களாக கரூரில்,

இந்த பூச்செரிதல் விழா கமிட்டியை தொடர்ந்து நடத்தி வரும் டி சி மதன் இது குறித்து செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, பூச்சொரிதல் விழாவை வெகு விமர்சையாக நடத்துவதற்காக பூச்சொரிதலுக்காக அமைக்கப்பட்ட விழா கமிட்டி குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வழிபாடுடன் நடைபெறும் இந்த பூச்சொரிதல் விழாவில், கரூர் மாவட்ட மக்கள் அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story