திமுகவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு !

திமுகவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு !

நாட்டுப்புறக் கலைஞர்

பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் காவடி ஆட்டம் குதிரை ஆட்டம் ஆடி திமுகவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

R_TN_CBE_POLLACHI_16.04.24_DMK_KARAKATTAM_PRACHARAM_SENTHIL_BYTE_SAKTHIVEL.02.mp4 பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் காவடி ஆட்டம் குதிரை ஆட்டம் ஆடி திமுகவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி ஏப்ரல் 16 பாராளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியைக்கு ஆதரவாக தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நெகமம் பேருந்து நிறுத்தம் அருகில் நாதஸ்வரம், தவில், மேளதாளத்துடன் காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக ஆட்சியில் இந்து அறநிலை துறை சார்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் அன்னதானத் திட்டம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 112 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற நிதி ஒதுக்கீடு, உள்ளிட்ட திமுக ஆட்சியில் அறநிலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்களை பொதுமக்களிடம் வழங்கி நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பேட்டி - செந்தில் பொள்ளாச்சி ம.சக்திவேல் பொள்ளாச்சி 9976761649.

Tags

Next Story