விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டம்

விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டம் வழங்க விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் தகவல்
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் விஜய் துவக்கி வைத்த தளபதி மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இயக்க நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் தமிழக முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு திட்டங்கள் தமிழகம் முழுவதும், செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பயிலகம் துவக்கப்பட்டு மாணவ- மாணவிகள் அதனை பயன்படுத்தி தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தி வருகிறார்கள். தற்போது ரொட்டி, பால், முட்டை வழங்குவதன் மூலம் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், ஐந்து இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கரூர் முத்துராஜபுரத்தில் இந்த திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story