மயிலாடுதுறையில் டிஎன்பிஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மயிலாடுதுறையில் டிஎன்பிஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4க்காகஅரசு நடத்தும் இலவச பயிற்சியில் சேர்ந்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 6244 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 5659 காலி பணியிடங்கள் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியிலும், 412 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியிலும், 173 காலிப்பணியிடங்கள் பட்டப்படிப்பு கல்வி தகுதியிலும் நிரப்பப்பட உள்ளது. இந்த விளம்பர அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர்கள் இணையவழியாக விண்ணப்பிக்க 28.02.2024 கடைசி நாளாகும். மேலும் எழுத்துத் தேர்வானது 09.06.2024 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வை பொருத்தவரை ஒரே நிலையாக பத்தாம் வகுப்பு தரத்தில் கொள்குறி வகையில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு, பொது அறிவு மற்றும் திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு என மொத்தம் 3 மணி நேர தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். எனவே மேற்கண்ட டி.என்.பி.எஸ்.சி.,யின் தொகுதி 4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 2வது தெரு, பூம்புகார் சாலை, பாலாஜி நகர், மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

எனவே மேற்கண்ட தேர்விற்கு தயாராகி வரும் தகுதியும் விருப்பமும் உள்ள மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையவும். மேலும் தகவல்களுக்கு 9499055904 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story