இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் துவக்கம்

X
இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் துவக்கம்
மயிலாடுதுறையில் சுயதொழில் செய்யும் பெண்களுகான இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை ஐ.ஓ.பி. வங்கி வளாகத்தில் சுய தொழில் செய்வோருக்கு இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார் . முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். 8ஆம் வகுப்பு கல்வித்தகுதி. 18 வயது முதல் 45வயதுவரை உள்ளவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் பங்குபெறலாம். பெண்களுக்கான தையல் பயிற்சி, காய்கறி சாகுபடி, இலகு ரக ஓட்டுனர் பயிற்சி, அகர்பத்தி தயாரிப்பு, சணல் பொருட்கள் தயாரித்தல், காகிதப் பை தயாரித்தல், தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி, பெண்களுக்கான எம்ப்ராய்டரி பயிற்சி, கணினி பழுது பார்த்தல் பயிற்சி செயற்கை ஆபரணம் தயாரிப்பு ,பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், கம்ப்யூட்டர் பயிற்சி, விவசாயம் திறன் மேம்பாட்டு திட்டம், கோழி வளர்ப்பு திட்டம் ,மாடு,ஆடு, மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.
Next Story
