வேளாண் அறிவியல் மையம் சார்பில் இலவச பயிற்சி

வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஏப்ரல் மாத இலவச பயிற்சிக்கு முதுநிலை விஞ்ஞானி திரவியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஏப்ரல் மாத இலவச பயிற்சி- முதுநிலை விஞ்ஞானி திரவியம் அழைப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, தோகைமலை அருகே உள்ள புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தில், ஏப்ரல் மாத இலவச வேளாண் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக முதுநிலை விஞ்ஞானியும், புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவருமான முனைவர் திரவியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 17ஆம் தேதி தோட்டக்கலை பயிர்களில் நீர் மேலாண்மை தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதே போல, ஏப்ரல் 18ஆம் தேதி கறவை மாடுகளில் கோடை காலத்தில் தீவன மேலாண்மை குறித்தும், ஏப்ரல் 20 ஆம் தேதி சோளம் சாகுபடியில் வறட்சி மேலாண்மை தொழில்நுட்பம் என்ற தலைப்பிலும், ஏப்ரல் 25ஆம் தேதி பாசன நீர் மேலாண்மை என்ற தலைப்பிலும், ஏப்ரல் 29ஆம் தேதி நிலக்கடலையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், ஏப்ரல் 30ஆம் தேதி கோடை வெப்பத்தை தணிக்கும் ஊட்டச்சத்து குளிர்பானங்கள் தயாரித்தல் என்ற தலைப்புகளில் இலவச பயிற்சி மையம் நடைபெற உள்ளது. எனவே, இந்த பயிற்சியில் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story