27 வகை காய்கறிகளால் அலங்காரம்

27 வகை காய்கறிகளால் அலங்காரம்

குத்தாலம் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் காளி திருநடனம் முடிந்து பத்தாம் நாள் உற்சவமான 27 வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.


குத்தாலம் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் காளி திருநடனம் முடிந்து பத்தாம் நாள் உற்சவமான 27 வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீமகா காளியம்மன் திரு நடன உற்சவம் நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி காளியம்மன் திருநடன உற்சவமானது தொடங்கி பல்வேறு ஆலயங்களுக்கு சென்று காளியம்மன் திரு நடனம் நடைபெற்றது. 9ம் நாளாக நேற்றுமுன்தினம் காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் பந்தல் காட்சி திருநடன உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று பத்தாம் நாளான ஸ்ரீ மகா காளியம்மனுக்கு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது. இதில் சுரைக்காய், கேரட், புடலங்காய், பீக்கங்காய், மிளகாய், பூசணிக்காய், பீட்ரூட், கத்தரிக்காய் தக்காளி உள்ளிட்ட 27 வகை காய்கறிகளால் அலங்கரித்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளியம்மன் கோவில் தெருவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story