குடியிருப்பு பகுதியில் சரிந்து விழுந்த ராட்சத பாறை - மின்கம்பம் சேதம்

குடியிருப்பு பகுதியில் சரிந்து விழுந்த ராட்சத பாறை -  மின்கம்பம் சேதம்

சரிந்து விழுந்த ராட்சத பாறை 

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை கொட்டி தீர்த்தது.இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடுவதுடன் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அருகே விவசாய பண்ணை குமரன் நகரில் இன்று அதிகாலை 150 அடி உயரத்தில் இருந்த ராட்சத பாறை கனமழை காரணமாக சரிந்தது.உருண்டு கீழே விழுந்த ராட்சத பாறை சாலையில் அமைக்கபட்டிருந்த மின்கம்பம் மீது மோதியதில் மின்கம்பம் கீழே விழுந்த்து சேதமடைந்தது. இப்பகுதியில் சுமார் நூற்றி ஐம்பதிற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அதிர்ஷடவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அப்பகுதியில் பாறையை அகற்றி மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story