உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரடி ஒளிபரப்பு - மாவட்ட ஆட்சியர்

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கரூரில் பல்வேறு இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பாக ஜனவரி 7,8- தேதிகளில் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" (GIM 2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 7-ம் தேதி காலை உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். துவக்க விழா நிகழ்ச்சிகள் (Live streaming) பொது மக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள், தொழில் கூட்டமைப்பு அரங்கம், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்வானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், தொழில் முனைவோர்கள் கண்டுகளிக்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story