அண்ணாமலையை அவமானப்படுத்த ஆட்டுத் தலையை வெட்டி வீடியோ வெளியீடு

அண்ணாமலை படத்துடன் நடுரோட்டில் ஆட்டின் தலை வெட்டப்பட்ட சம்பவ வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் ஆளுநருக்கு புகார் அளித்துள்ளனர்.

அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வியடைந்ததை கொண்டாடும் வகையில், நடுரோட்டில் வைத்து ஆடு ஒன்றின் தலையை வெட்டி சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறையில் பாஜகவினர் ஆன்லைன் வாயிலாக இன்று புகார் அளித்தனர்.

தொடர்ந்து பாஜக மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டியும் , சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு புகார் மனுவினை இணையத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

Tags

Next Story