தேவி நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேவி நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வழி ஊராட்சி கோட்டக்கரை பகுதியில் உள்ள தேவி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வழி ஊராட்சி கோட்டக்கரை பகுதியில் உள்ள தேவி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வழி ஊராட்சி கோட்டக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி நாகமுத்து மாரியம்மன், ஸ்ரீ ஜடாமுனீஸ்வரா், ஸ்ரீ சாந்த வராஹி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவாஹனம், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரவேச பலி, அங்குராா்ப்பனம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை இரண்டாம் கால பூஜை, விசேஷ சந்தி, மூல மந்திர ஹோமம், தீபாராதனை, யந்திர ஸ்தாபனம், சுவாமி சிலை படிய வைத்தல், அஷ்டபந்தன் மருத்து சாற்றுதல், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நிகழ்வுகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை மங்கள இசை, 4-ஆம் கால யாக பூஜை, கணபதி வழிபாடு, கோ பூஜை, கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

பின்னா் வேத மந்திரம் முழங்க கோயில் கோபுரம் மற்றும் மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். பின்னா் மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன், தோ்வழி ஊராட்சித் தலைவா் கிரிஜா குமாா் உள்ளிட்டோரும், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

Tags

Next Story