ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் குண்டம் திருவிழா
பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா தொடங்கியது.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா தொடக்கம் - பக்திபரவசத்துடன் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்.. பொள்ளாச்சி..மார்ச்..27 பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது.. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 11.ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.. சக்தி கும்பம் எடுத்தல் பூவோடு எடுத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீளம் குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.. இந்த குண்டம் திருவிழாவில் பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..
Next Story